அதிரையில் மதம் கடந்த மனிதநேயம்! இந்து மதத்தவரின் உடலை அடக்கம் செய்த இஸ்லாமிய இளைஞர்கள்!

அதிரை ரயில்வே நிலையத்தில் ஆதரவின்றி முதியவர் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் அறிந்த இஸ்லாமியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின் அதிரை பைதுல்மால் ஆம்புலன்ஸ் மூலம் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். இதனையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு வந்த காவல்துறை அதிகாரி உடலை பார்வையிட்டார்.

இறந்து நீண்ட நேரமாகிவிட்டதினால் உடல் மிகவும் மோசமான நிலையிலிருந்தது. உடனே இஸ்லாமியர்கள் உடலை குளிப்பாட்டி தங்களின் செலவில் ஹிந்து முறைப்படி பேரூராட்சிக்கு சொந்தமான இடுக்காட்டில் அடக்கம் செய்தனர். இதனை பார்த்துகொண்டிருந்த சில ஹிந்து நண்பர்கள் தங்கள் பங்கிற்கு சிறு தொகையினை அளித்தனர். மேலும் ஹிந்து முறைப்படி அடக்கம் செய்யவும் உதவினர்.

image image image image

Close