அதிரை பிலால் நகரில் 6 குடும்பத்தார்களுக்கு கழிப்பரை கட்டிக்கொடுத்த நல்ல நெஞ்சங்கள்!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ளது பிலால் நகர் பகுதி. 400 க்கும் அதிகமான குடும்பங்கள் வசித்து வரும் இப்பகுதியில் பட்டுக்கோட்டை சுற்றுவட்டார அளவில் மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலையில் இருந்து வருகிறது. மேலும் இங்குள்ள பெரும்பாலானவர்கள் கூலி வேலைகள் செய்தும், சாலையோர கடைகள் நடத்தியும் வருகின்றனர். மிகவும் குறைவான வருமானம் மட்டுமே பெற்றுவரும் இவர்களால் தங்களுக்கான அடிப்படை தேவைகளை கூட செய்ய முடியாத நிலை உள்ளது.

இந்த 400 குடும்பங்களில் 52 சதவிகித மக்கள் வாடகை வீடுகளில் வசித்து வருகின்றனர். அதிரையில் பிலால் நகரின் வளர்ச்சிக்காக நிதி திரட்டி BILAL NAGAR DEVELOPMENT PROGRAMME என்ற திட்டத்தை நிறுவி ஒரு அமைப்பாக பிலால் நகர் குறித்த ஒரு சர்வே அடுக்கப்பட்டதில் 128 குடும்பங்களில் கழிவரைகள் இல்லாதது தெரியவந்தது. இந்த கழிவரை இல்லாததால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் பெண்கள் கடும் இன்னல்களை சந்தித்து வந்தார்கள். இந்நிலையில் அந்த அமைப்பின் சார்பாக தற்பொழுது 6 வீடுகளுக்கு தரமான முறையில் கழிப்பரைகள் கட்டப்பட்டு உரியவர்களிடம் பயண்பாட்டுக்காக வழங்கப்பட்டது. இதில் ஒரு கழிப்பறை கட்டுவதற்க்கு 18 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது.

மேலும் இந்த அமைப்பு இப்பகுதியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கழிவரை கட்டவேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இவர்களின் இந்த மேலான பணியில் உங்களின் பங்கும் இருக்க வேண்டுமென்றால் உங்களால் முடிந்த அளவுக்கு உங்களின் பொருளாதாரத்தை இதற்க்கு வழங்குங்கள் என அதிரை பிறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

தொடர்புக்கு: 96777 41737

image image image

Close