அரசு பள்ளிகளுக்கு சாதி பெயர் சூட்டப்பட்டிருந்தால் மனு அளிக்கலாம்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சாதி அல்லது சமுதாயங்களின் பெயர்களில் உள்ள கல்வி நிலையங்களின் பெயர்களை உடனடியாக நீக்கி உத்தரவிட வேண்டும் என எஸ்.சரவணன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர்,சாதி அல்லது சமுதாயத்தை குறிப்பிடும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களின் பட்டியலை மனுதாரர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்.

மேலும் மனுதாரர் குறிப்பிடுவது போல அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் சாதி பெயர்கள் இருந்தால், அதுகுறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Close