அமீரகத்தில் இன்று கோடை விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் திறப்பு

கோடை விடுமுறை முடிந்து அமீரகத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள பள்ளிக்கூடங்களும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது.

அமீரகம் முழுவதும் மொத்தம் 1,256 அரசு மற்றும் தனியார் பள்ளிக்கூடங்கள் உள்ளது. இதில் 60 சதவீதம் அரசு கல்வி நிறுவனங்களாகும். இந்த பள்ளிக்கூடங்களில் மொத்தம் 9 லட்சத்து 70 ஆயிரம் மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்குள்ள பள்ளி கல்வி முறை 3 பருவ காலமாக செயல்படுகிறது. இதில் குளிர் கால பருவம், இளவேனிற்கால பருவம் மற்றும் கோடைகால பருவம் ஆகிய பருவங்கள் அடங்கும்.

கடந்த 2015–ம் ஆண்டில் ஆகஸ்டு 30–ந்தேதி பள்ளிக்கூடங்கள் தொடங்கின. அதன் பிறகு குளிர்கால விடுமுறைக்காக டிசம்பர் 20–ந் தேதி முதல் 2016–ம் ஆண்டு ஜனவரி 9–ந்தேதி வரை பள்ளிக்கூடங்ளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் மாதம் 27–ந்தேதி முதல் 2 வாரங்களுக்கு இளவேனிற்கால விடுமுறை அளிக்கப்பட்டது. அதன்பின்பு ஏப்ரல் மாதம் 10–ந்தேதி பள்ளிக்கூடங்கள் தொடங்கின. இந்த ஆண்டின் கோடை விடுமுறைக்காக ஜூன் 23–ந் தேதி பள்ளிக்கூட வகுப்புகள் நிறைவடைந்து 3 மாதம் கோடை விடுமுறை பள்ளிகளுக்கு அளிக்கப்பட்டது.

கோடை விடுமுறை முடிந்து நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் 2016–2017 ஆம் ஆண்டுக்கான கல்வி ஆண்டு தொடங்குகிறது

அபுதாபி உள்பட அமீரகத்தின் அனைத்து பள்ளிக்கூடங்களும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் திறக்கப்படுவதை முன்னிட்டு அபுதாபி போக்குவரத்தில் புதிய கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதில் நாளை முதல் அபுதாபி நகர சாலைகளில் காலை 6.30 மணி முதல் 9 மணி வரை தனியார் பஸ்கள் அல்லது லாரிகள் அந்த சாலைகளில் பயணம் செய்வது தடை விதிக்கப்படுகிறது.

Close