அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் நடைபெற்ற இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி (படங்கள் இணைப்பு)

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பாக இலவச மிதிவண்டிகள் வழங்கப்படுவது வழக்கம். 
நமதூர் காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் மொத்தம் 183 மாணவர்களுக்கு தேவையான சைக்கில் உதிரி பாகங்களாக கொண்டுவரப்பட்டு பள்ளியிலேயே கோர்க்கப்பட்டது.
இன்று 183 மாணவர்களுக்கும் பள்ளி வளாகத்தில் இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டது.
இதில் பள்ளி தலைமையாசிரியர் மக்பூப் அலி, அதிரை பேரூராட்சி துனை தலைவர் பிச்சை  மற்றும் ஆ.தி.மு.க வை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

Close