Adirai pirai
sports உள்ளூர் செய்திகள்

வட்டார அளவிலான தடகள போட்டிகளில் அதிரை காதிர் முஹைதீன் ஆண்கள் பள்ளி சாம்பியன்!

image59 வது குடியரசு தின விழா பட்டுக்கோட்டை வட்ட தடகள போட்டிகள் 26/08/2016. 27/08/2016 ஆகிய இரண்டு நாட்கள் மதுக்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் 50க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்து 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டதில், காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அதிராம்பட்டினம் மாணவர்கள் 90 புள்ளிகள் பெற்று ஒட்டு மொத்தம் சாம்பியன் பட்டம் வென்றனர். மேலும் சீனியர் பிரிவு மாணவன் பி. முத்துராசு தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார்.

வெற்றி பெற்றவர்களுக்கு பாராளுமன்ற மேலவை உறுப்பினர் ஆர்.வைத்தியலிங்கம் MP. அவர்கள், மற்றும் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் கு. பரசுராமன் MP அவர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்கள் பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் C.V சேகர் அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் பாராட்டப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy