இறந்த மனைவியுடன் நடந்து சென்ற ஒடிசா நபருக்கு உதவியுள்ள பஹ்ரைன் இளவரசர் கலிஃபா!

இந்திய பிரதமமந்திரி நரேந்திரமோடி, இலட்சக்கணக்கான மெறுமதிமிக்க ஆடைகளை அணிந்துகொண்டு உலகை வலம்வந்துகொண்டிருக்கும்
வேளையில், , அமரர்ஊர்தி மறுக்கப்பட்டதால்
மனைவியின் உடலை தோள்களில் சுமந்துசென்ற நிகழ்வை பஹ்ரைனில் வெளிவரும் அல்பார் அல்ஹலீஜ் என்ற பத்திரிகைவாயிலாக தெரிந்துகொண்ட பஹ்ரைனின் இளவரசர் கலீபா பின் சல்மான், மிகவும் மனமுருகி பாதிக்கப்பட்ட இந்நபருக்காக ஏதாவது செய்யவேண்டுமென்று எண்ணினார்.

பஹ்ரைனிலுள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொண்ட இளவரசர், பாதிக்கப்பட்ட மனிதருக்கு கணிசமான தொகையை நன்கொடையாக வழங்கினார்.

நாளை அரபிகளில் ஒருவர் இந்த கிராமத்திற்கு அம்புலன்ஸ் வாங்கிகொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.!

12 வயது மகளை அழைத்துக்கொண்டு 12 கிலோமீட்டர். நடந்த பின்னர் , சிலநல்ல உள்ளங்களின் முயற்சியால் இவருக்கு, 60 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இவருடைய கிராமத்திற்கு செல்வதற்கு வாகனம் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது.

Close