அதிரை பேரூராட்சி தலைவரை நம்மால் தேர்ந்தெடுக்க முடியாது!!!

மாநகராட்சி மேயரைத் தொடர்ந்து நகராட்சி, பேரூராட்சித் தலைவர் தேர்வு முறையில் மாற்றம் செய்யும் சட்டத்திருத்த மசோதாவை அமைச்சர் வேலுமணி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.

மாநகராட்சி மேயரை மக்களே தேர்ந்தெடுக்கும் முறை மாற்றப்பட்டு, கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் முறைக்கான சட்டத் திருத்த மசோதா நடப்பு பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இதையடுத்து, நகராட்சி, பேரூராட்சி தலைவர்களை கவுன்சிலர்களே தேர்ந்தெடுக்கும் முறைக்கான சட்டத்திருத்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

Close