அதிரையில் ரயில்நிலைய பணிகளை ஆய்வு செய்த தெற்கு ரயில்வே உதவிப்பொறியாளர் (படங்கள் இணைப்பு)

அதிரை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான ரயில்வே திட்டம் பணிகள் துவங்கப்பட்டு கடந்த சில ஆண்டுகளாக மிகவும் மந்தமான நிலையில் நடந்து வருகின்றன. இது குறித்து பல கோரிக்கைகள், பல்வேறு புகார் மனுக்கள், பலவிதமான ஆர்ப்பாட்டங்கள் என நமதூர் மக்கள் நடத்தினால் இந்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

இந்நிலையில் தற்பொழுது இந்த ரயில்வே திட்டத்தை கொண்டு வந்தே ஆகவேண்டும் என்று உறுதி கொண்ட சமுக ஆர்வலர்கள் இதற்கான பல்வேறு முயற்சிகளில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். அதன் விளைவாக இந்த ரயில்வே பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் அதிரை ரயில்வே நிலையத்திற்க்கு  தெற்கு ரயில்வே உதவிப்பொறியாளர் வருகை தந்து பணிகளை ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது ரயில் திட்டத்தினை கொண்டு வரும் முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டு வரும் சமுக ஆர்வலர்கள் உடனிருந்தனர்.image image image image

Close