மாட்டுக்கறி தான் உசேன் போல்டின் வெற்றிக்கு காரணம் என்று கூறிய பா.ஜ.க M.P!

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த டெல்லி வடமேற்கு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் உதித் ராஜ், மாட்டுக்கறி சாப்பிட்டதால்தான் ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் ஒன்பது தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார் என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இவரின் கருத்தால், பாஜகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களில் மாடுகளை இறைச்சிக்காக அறுக்கவும், விற்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், குஜராத் மாநிலம் உனா மாவட்டத்தில், தோலுக்காக பசுவைக் கொன்றதாகக் கூறி தலித் இளைஞர்களின் மீது பசுக் காவலர்கள் கடுமையாகத் தாக்கினர். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து அம்மாநில தலித் சமுதாயத்தவர்கள் பெரிய அளவில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Close