தென் கிழக்காசியாவில் இஸ்லாத்தை பரப்பிய இந்தியர்கள்:

தென் கிழக்காசியாவில் இஸ்லாத்தை பரப்பிய இந்தியர்கள்:

1511ல் ஜரோப்பியர்கள் மலேசியாவுக்கு வருவதற்கு முன்பாகவே இந்திய முஸ்லிம்கள் இப்பகுதியில் வணிக தொடர்போடு இருந்துள்ளனர். அதன் வழியாக இஸ்லாத்தையும் பரப்பியுள்ளனர்.இது குறித்து மலாயா சரித்திரத்தில் சுவாமி.சத்தியானந்தா கீழ்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
 மலேசியாவின் கிடா(கடாரம்) மாநிலத்தின் புகழ் ஓங்கியதால் ஜாவா-சுமத்ரா (இந்தோனேஷியா) போன்ற நாடுகளிலிருந்து கி.பி.1250,1300.ஆம் ஆண்டுகளில் அங்கு வசித்து வந்த முஸ்லிம்கள் கிடாவுக்கு வருகை தந்தனர்”.
 சென்ற நூற்றாண்டில் மலேசியாவின் திரங்கானு மாநிலத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டு ஒன்று கி.பி.1303ஆம் ஆண்டுகளுக்கு முன்பே, மலேஷியாவில் முஸ்லிம்கள் வாழ்ந்ததாக கூறுகிறது. அங்கு கண்டெடுக்கப்பட்ட ஆவணங்களில் 1326,ஆம் ஆண்டு கட்டத்தில் சில பகுதிகல் தமிழ் முஸ்லிம்கள் வாழ்ந்த்தாக கூறப்படுகிறது.
 “கிபி 1250ல் ஜவா-சுமத்ரா(இந்தொனேஷியா) போன்ற நாடுகளில் வாழ்ந்துக் கொண்டிருந்த இந்திய முஸ்லிம்கள் கிடா (கடாரம்)வுக்கு மார்க்கப் பணிகளை செய்து வந்து போய்க் கொண்டிருந்த காலத்தில் இந்துக்களாய் இருந்த பலர் இஸ்லாத்தை தழுவினர்” என சுவாமி சத்தியானந்தா தனது மலாய சரித்திரத்தில் (பக்கம் 65)ல் குறிப்பிடுகறார்.
 கி.பி.1474ல் கிடா(கடாரம்)வின் மன்னராக மஹாபோதி வத்ஸன் இருந்த போது, இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய வந்த ஷேக் அப்துல்லா அவர்களை தனது மண்டபத்திற்கு அழைத்து உரையாற்றுமாறு கேட்டுக்கொண்ட்தாகவும்,அவரின் அர்த்தமுள்ள பேச்சில் மயங்கி மன்னன்.இஸ்லாத்தில் தன்னை இணைத்துக்கொண்டதாகவும் சுவாமி சத்தியானந்தா தனது நூலில் குறிப்பிடுகிறார்.மலாக்காவை ஆட்சி செய்த பரமேஸ்வரன் என்பவன்,சுமத்ரா இளவரசியை மணந்து இஸ்லாத்தை ஏற்று சுல்தான் முஹம்மது இஸ்கந்தர்ஷா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டதாக ஒரு வரலாறு கூறுகிறது.
           அவறது மகன் ராஜா புசார் மூடா என்பவர்தான் இஸ்லாத்தை  ஏற்றார் என்றும்,பரமேஸ்வரன் ஏற்கவில்லை என்றும் வரலாற்றை விவாதங்கள் உள்ளன. முன்ஷி அப்துல்லாஹ் எழுதிய SEJARAH MELAYA என்ற மன்னரே மலேஷியாவின் முதல் முஸ்லிம் மன்னர் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
    இவருக்கு இரு மனைவிகள் என்றும், இவரது அமைச்சரவையில்,தமிழ் முஸ்லிமாக இருந்த ஒருவரின் மகள் அதில் ஒருவர் என்றும்,அவருக்கு பிறந்த பிள்ளைக்கு ராஜா காஸீம் என்று பெயர் சூட்டப்பட்டதாகவும் அக்குடும்பத்தில் அரியணை தகராறு ஏற்பட்டபோது, ஜலாலுதீன் என்ற தமிழ் முஸ்லிம் வியாபாரிதான் அதை தீர்த்து வைத்ததாகவும், சுவாமி சத்தியானந்தாவின் நூல் கூறுகிறது.
    மலாய பல்கழகத்தில் பணியாற்றிய இராம சுப்பையா அவர்கள் 1968ல் மலாக்கா மன்னர்கள் என்ற நூலை எழுதினார்.அதில் பரமேஸ்வரனின் மகள் ராஜா கெச்சில் புசார் பட்டத்திற்கு வந்தார்.அவரது மூன்று மகள்களின் ஒருவரான ராதின் தங்கள் ஆட்சிக்கு வந்தபோது, செய்யத் அப்துல் அஜீஸ் எனும் மார்க்க பிரச்சாரம் மூலம் இவர் இஸ்லாத்தை தழுவியதாகவும், இவரே மலேஷியாவின் முதல் முஸ்லிம் மன்னர் என்றும் கூறியிறுக்கிறார். 
  மலாயாவில் இஸ்லாம் பரவியபோது, பழைய எழுத்துகளை விடுத்து,அவர்கள் அரபு எழுத்துகளில் மலாய் மொழியை(ஜாவி) எழுதத் தொடங்கினர்.இதை கற்பித்தவர் இந்திய முஸ்லிம் வணிகர்களே முதன் முதலாக இஸ்லாம் சுமத்ராவிலும்(இந்தோனேஷியா) மலேஷியாவிலும் தமிழ் முஸ்லிம் வணிகர்களாலும் குஜராத்திகளாலும் பரப்பப்பட்டது என “தமிழரின் வீழ்ச்சியும் –எழுச்சியும்” என்ற நூலின் மலேஷிய எழுத்தாழர் புலவர் கிள்ளி குறிப்பிட்டுள்ளார்.
 -மக்கள் உரிமை

Advertisement

Close