300GB 4G டேட்டா 249 ரூபாய் மட்டுமே! ஜியோவை அதிர வைத்த BSNL!

1 ஜி.பி ரூ.1 மட்டுமே BSNL அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டிபோடும் விதமாக பி.எஸ்.என்.எல். ரூ.249 இணைய (பிராட்பேண்ட்) சேவையை வழங்க முடிவு செய்துள்ளது.

இத்திட்டத்தின்படி ஒரு ஜி.பி. இணைய சேவையை பயன்படுத்த ஒரு ரூபாய்க்கும் குறைவாகவே வசூலிக்கப்படும் என்றும் இதன் மூலம் வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு 300 ஜி.பி. டேட்டாவை ரூ.249 பெறமுடியும் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் வரும் செப்டம்பர் 9ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

மேலும் இந்த திட்டத்தை பற்றி பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குநர் அனுபம் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இந்த திட்டத்தின் மூலம் பிராட்பேண்ட் சேவையின் பயன்பாட்டின் தரம் உயரவும் அதேபோல புதிய வாடிக்கையாளர்களைக் கவரவும் உதவும். இந்த திட்டத்தில் வாடிக்கையாளர்கள் எந்த தடையும் இன்றி இணைய சேவையை பயன்படுத்தலாம்.

இந்த புதிய திட்டத்துக்கு நாங்கள் 2MBPS வேகத்தில் வழங்க முடிவுசெய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

விளம்பரத்துக்காக அறிமுக செய்யப்பட உள்ள இந்த திட்டத்தில் முதல் ஆறு மாதத்துக்கு 1 ஜி.பி-க்கு ரூ.1 மட்டுமே வசூலிக்கப்படும்.

பின்னர் வாடிக்கையாளர்கள் வழக்கமான பிராட்பேண்ட் திட்டங்களில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

Close