Adirai pirai
posts

அமெரிக்காவில் பயங்கர நிலநடுக்கம்

அமெரிக்காவின் ஓக்லஹோமா நகரின் மத்திய பகுதியில் பலத்த நிலநடுக்கம் எற்பட்டது. இது ரிக்டரில் 5.6 ஆக பதிவாகியுள்ளதாக அந்நாட்டு புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தகவல் படி, ஓக்லஹோமா நகரின் மத்திய பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வடக்கு டெக்சாஸ், நெப்ராஸ்கா நகரிலும் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவு கோளில் 5.6 ஆக பதிவானது. உள்ளூர் நேரப்படி காலை 7.02 மணியளவில் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியன. நிலநடுக்கத்தின் காரணமாக ஏற்பட்ட பொருட்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் பற்றிய உடனடி தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.