பட்டுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க முடிவு!

பட்டுக்கோட்டையில் நிகழாண்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என் நகர்மன்றத் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு தெரிவித்துள்ளார்.

பட்டுக்கோட்டை நகர்மன்றக் கூட்டம் அதன் தலைவர் எஸ்.ஆர். ஜவஹர்பாபு தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. துணைத் தலைவர் வி.கே.டி. பாரதி, நகராட்சி ஆணையர் கே. அச்சையா முன்னிலை வகித்தனர்.

இதில் பேசிய ஜவஹர் பாபு, பட்டுக்கோட்டை நகராட்சியை தமிழகத்திலேயே சிறந்த நகராட்சியாக தேர்வு செய்து, சென்னையில் நடைபெற்ற 70-வது சுதந்திர தினவிழாவில் ரூ. 15 லட்சத்துக்கான காசோலையுடன், முதல் பரிசுக்கான விருதையும் வழங்கிப் பெருமைப்படுத்திய தமிழக முதல்வருக்கு நமது நகராட்சி சார்பில் நன்றி தெரிவித்துகொண்டார்.

Close