அதிரை ரஹ்மானியா மதர்ஸா பேராசிரியர் நெய்னா ஆலிம் அவர்களுக்கு சிறந்த மார்க்க சேவைக்கான விருது! (படங்கள் இணைப்பு)

திருவாரூர் மாவட்டம் குடவாசலை அடுத்த பரக்கதாபாத் பகுதியில் இயங்கி வரும் ஜாமிஆ ஜன்னதுன் நயீம் அரபிக் கல்லூரி இயங்கி வருகிறது. இந்நிலையில் இந்த கல்லூரியின் புதிய கட்டிட திறப்பு விழா அப்துர் ரஜ்ஜாக்-ஜுலைஹா கல்வி அரக்கட்டளை சார்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மௌலானா மௌலவி பி.எஸ்.பி.ஜெய்னுல் ஆபிதீன் அவர்கள் தலைமையில் உலமாக்கள் மார்க்க சொற்பொழிவுகளும், பட்டமன்றமும், சிறந்த மார்க்க சேவை புரிந்தவர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன. இதில் அதிரை ரஹ்மானியா அரபுக்கல்லூரி பேராசிரியரும், ஆலடித்தெரு முஹைதீன் ஜும்மா பள்ளி இமாமுமான நெய்னா ஆலிம் அவர்களுக்கு சிறந்த மார்க்க சேவை புரிந்தமைக்கான விருது வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலமாக்கள் பொதுமக்கள், ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

image imageimage

Close