முகநூல் போராளிகளே! நமக்கு ஒரு நல்ல சேதி!!!

imageஅரசுக்கு எதிராக விமர்சனம் செய்யும் யார் மீதும் தேச விரோத வழக்கு பதிவு செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. தன்னார்வ அமைப்பு ஒன்று தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இவ்வாறு கூறியுள்ளது. அரசை விமர்சிக்கும் வகையில் யாராவது கருத்து தெரிவித்தால் அது தேச துரோகம் அல்லது அவதூறு சட்டத்தின் கீழ் குற்றம் ஆகாது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். தேச துரோக வழக்குகளை பதிவு செய்யும் போது உச்சநீதிமன்றம் ஏற்கனவே அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சில விதிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும், காவல் துறை தலைவர்களுக்கும் இந்த உத்தரவு நகலை அனுப்பி வைக்க வேண்டும் என்ற மனுதாரர் தரப்பு கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்துவிட்டனர். அணு உலைக்கு எதிரான போராட்ட குழுவினர் உள்ளிட்டோர் மீது தேச விரோத வழக்குகள் பதிவு செய்யப்பட்டதை மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டி வாதாடினார

Close