பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கி எரிந்த கொடூரம்!

​உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் பிறந்து 18 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கிய வீசிய கொடூரம் அரங்கேறியுள்ளது. கான்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சரிதா என்ற பெண் குழந்தையை காணவில்லை என்று அலறினார். இதனையடுத்து குழந்தையை தேடும் பணியில் போலீஸ், மற்றும் மருத்துவ ஊழியர்கள் ஈடுபட்டனர்.

அப்போது ஒரு பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்ட இடத்திற்கு ஓடிய ஊழியர்கள் அங்கு இருந்த தடுப்பு கம்பியில் குழந்தை துணியுடன் சிக்கியிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது சரிதா வார்டை விட்டு வெளியே சென்று விட்டு பின்னர் வார்டுக்கு திரும்பும் போது குழந்தை இல்லாதது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை விசாரித்த போது குழந்தையின் தாய்க்கு 3 பெண் குழந்தைகள் இருப்பதால் மாடியில் தூக்கி வீசியதாக தெரிவித்தார். இதனையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Source: Dinakaran

Close