Adirai pirai
islam இந்தியா

முஸ்லிம் நீதிபதிகளே இல்லாமல் செயல்படும் உச்சநீதிமன்றம்! முன்னால் நீதிபதி கவலை!

நீதிபதி எம். ஒய். இக்பால் மற்றும் நீதிபதி பக்கீர் முகம்மது இப்ராகிம் கலிபுல்லா ஆகிய இருவரும் ஓய்வு பெற்றதை அடுத்து உச்ச நீதிமன்றம் முஸ்லீம் நீதிபதி இல்லாமல் செயல்படுகின்றது. என முன்னாள் தலைமை நீதிபதி கே. ஜி. பாலகிருஷ்ணன் கவலை தெரிவித்துள்ளார்.image

நீதிபதி எம். ஒய். இக்பால் மற்றும் நீதிபதி பக்கீர் முகம்மது இப்ராகிம் கலிபுல்லா ஆகிய இருவரும் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளாக கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டனர். இவர்களில் நீதிபதி இக்பால் இந்த ஆண்டு பிப்ரவரி 2ம் தேதியும், நீதிபதி கலிபுல்லா ஜுலை 22ம் தேதியும் ஓய்வு பெற்றார்கள்.இதனை அடுத்து தற்போது உச்சநீதிமன்றம் முஸ்லீம் நீதிபதிகளே இல்லாத மன்றமாக செயல் படுகின்றது.

இதனையடுத்து உச்ச நீதிமன்றத்தில் முஸ்லிம் நீதிபதிகளே இல்லாத நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் கடந்த 11 ஆண்டுகளில் முதல் முறையாக, முஸ்லீம் நீதிபதி இல்லாமல் இந்திய உச்ச நீதிமன்றம் செயல்படுகிறது என கவலை தெரிவித்துள்ளார்.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy