IPhone 7 & 7 Plus ஐ நேற்று அறிமுகப்படுத்தியது Apple நிறுவனம்!

​உலகமே எதிர்ப்பார்த்த புதிய பொழிவுடன் ஐ-போன் 7, மாதிரிகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனமானது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐபோன் 6 மற்றும் 6 எஸ் போன்கள் அறிமுகப்படுத்தியது. அதே போன்று இந்தாண்டின் ஐபோன் 7 மாடல்கள், வரும் செப்டம்பர் மாதம் வெளியாகும் என கடந்த மாதம் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில், ஆப்பிள் நிறுவனமானது ஐ-போன் 7 மாதிரியை நள்ளிரவில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதேபோல் ஐ-போன் 7 பிளஸ் மாதிரியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆப்பிள் வாட்ச் சீரியஸ்-2 வும் அறிமுகப்படுத்தப்பட்டது.

பழைய ஐ போன் மாடல்களை விட 60 சதவீதம் அதிவேக கேமரா வசதி இதில் உள்ளது. இந்த செல்போன் ஜெட் பிளாக், பிளாக், கோல்ட், சில்வர், ரோஸ் கோல்ட் ஆகிய கலர்களில் வெளியாகிறது. ஆப்பிள் 7 பிளஸ்சில் பின்பக்க கேமரா 12 மெகா பிக்சல் தரத்தில் 2 லென்ஸ் உடன் வெளியாகியுள்ளது.

இந்த 2 லென்ஸ் 56.எம்.எம்., ஆப்டிகல் சூம் வசதிக்காக ஒரு லென்ஸும், வைட் ஆங்கிள் வசதிக்காக மற்றொரு லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. அதிக நேரம் தாங்கும் பேட்டரி வசதியும் இதில் உள்ளது.

ஆப்பிள் ஐபோன் 7 ல் உலகில் பிரபலமான மரியோ கேம் அறிமுகமாகிறது. அதேபோல் சமீபத்தில் மிகவும் பிரபலமான ‛போக்கிமேன் கோ’ விளையாட்டு ஆப்பிள் வாட்சிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஐபோனின் விலை:

ஐபோன் 7 ன் தொடக்க விலை ரூ. 44000 (32 ஜிபி), ஐபோன் 7 ப்ளஸ் தொடக்க விலை ரூ. 49,900 (32 ஜிபி) எனவும் கூறப்படுகிறது. இருப்பினும் அதிகார்பூர்வ விலை பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. ஐ-போன் 7, 7 ப்ளஸ் மாடல் போன்கள் அமெரிக்க சந்தைகளில் செப்டம்பர் 16 முதல் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் தொடக்கப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்தியாவில் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஐ-போன் 6, 6S மாடல்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போது, அவற்றின் அறிமுக விலை ரூ. 62,000 முதல் ரூ. 92,000 என்ற அளவில் இருந்தது. பின்னர் இந்த மாடல்களின் விலையில் 16% வரை விலை குறைப்பு செய்தது ஆப்பிள் நிறுவனம்.

Close