மொயின் அலிக்கு எதிராக I.C.C. நடவடிக்கை!

இந்தியா இங்கிலாந்து அணிகள் விளையாடி வரும் 3வது டெஸ்ட் போட்டியின் போது தீவிரவாத இஸ்ரேலிய யூத தீவிரவாதிகளால் அழிந்து வரும் காஜா வுக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி தனது கையில் SUPPORT GAZA [காஜவை ஆதரிப்பீர்) என்று எழுதப்பட்டிருந்த பேண்டை அணிந்திருந்தார்.
இது உலக முஸ்லிம்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமல்லாமல் இவருக்கு ரசிகர்களும் அதிகரித்தனர். 
ஆனால் இது உலக கிரிக்கெட் விதிமுறைக்கு எதிரானது என ஐ.சி.சி. குற்றம் சாட்டியுள்ளது. 
ஐ.சி.சி விதிமுறையின் படி சர்வதேச கிரிக்கெட் போட்டியின் மத சம்பந்தமான, அரசியல் சம்பந்தப்பட்ட, வன்முறை சம்பந்தப்பட்டவைகளை தங்கள் உடைகளில் வெளிப்படுத்தக்கூடாது.
இதனை மொயின் அலி மீறியுள்ளதால் அவர் மீது சர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. 
ஐ.நா சமுக அமைப்புகள் மேலை நாடுகள் செய்யாத காரியத்தை ஒரு கிரிக்கெட் வீரர் உலகம் முழுவதும் வெளிபடுத்தினார். இதனால் இவர் மேல் நடவடிக்கை!
நல்லதுக்கு காலம் இல்லாமல்
போய்விட்டது
-நூருல் இப்னு ஜஹபர் அலி

Advertisement

Close