தோஹாவில் அதிரையர்களின் உற்சாகமான ஹஜ் பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)

உலக முஸ்லிம்களின் புனித மாதங்களுல் ஒன்றான துல்ஹஜ் பிறை 10ல் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு உலகம் முழுவதும் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று ஹஜ் பெருநாள் கொண்டாடப்பட்டது. இதனை அடுத்து அங்கு பணி நிமித்தமாக வசித்து வரும் அதிரையர்கள் ஒன்று கூடி ஹஜ் பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர். இவர்களுக்கு அதிரை பிறையின் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்கள்.

குறிப்பு:உள்ளூர், வெளிநாடுகளில் ஹஜ் பெருநாள் கொண்டாடும் அதிரை சகோதரர்கள் தங்கள் குருப் புகைப்படங்களை அதிரை பிறையில் பதிய விரும்பினால் – 9597773359 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பவும்

இது குறித்து கத்தாரில் இருந்து நமது வாசகர உபயதுல்லா அவர்களின் பதிவு…

கத்தார் நாட்டின் தலைநகரான தோஹா நகரில் நோன்பு பெருநாள் தொழுகையோடு அதிரையர்களின் பெருநாள் சந்திப்பு இனிதே நடந்தேறியது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியிலிருந்தாலும், வேலையின் பளுவாலும் அதிரையரின் ஒன்றுகூடல் முடியாத காரியமாக இருந்தபோதும் இப்பெருநாள் எங்களை இணைத்தது. அல்ஹம்துலில்லாஹ். குடும்பத்தோடு கொண்டாட முடியாத வருத்தம் இருந்தாலும் நண்பர்களே குடும்பம் என அன்பை பரிமாறிக்கொள்ளும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சியாக மாறியது.13632608_1058023250945561_1145749905_o 13589206_1058023384278881_1302720301_o

83c1fd88-dcfb-484b-b628-322d959ffd2b 85e0ef9b-58ea-46fc-91cd-6086303c7c90 13616400_1058023430945543_439111322_o 14315463_1109195862494966_782597869_o 14284941_1109195772494975_1282163300_o

Close