மமக உறுப்பினர் சேர்க்கை இன்று நடைபெற்றது


மமக உறுப்பினர் சேர்க்கை தஞ்சை தெற்கு மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று காலை 11.30 மணியளவில் தலைமை தபால் நிலையம் அருகில் நடைபெற்றது.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட பொருளாளர் அருமை அண்ணன் மதுக்கூர் கஃபார் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி துவங்கியது. மாவட்ட செயலாளர், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகிக்கத்தனர்.

வீரமனிகனடன் அவர்கள் வரவேர்புரை நிகழ்த்தி வரவேற்றார். தலைமை உரை கபார் அவர்கள் நிகழ்த்தினார். மமக மாநில அமைப்பு செயலாளர் அண்ணன் ராவுத்தர்ஷா அவர்கள் பரப்புரையை துவங்கி வைத்தார். மமக மாவட்ட செயற்குழு உறுப்பினர் அண்ணன் பாதுசா அவர்கள் சிற்றுரை நிகழ்த்தினார். மமக மாநில அமைப்பு செயலாளர் பெரியவர் மன்னை செல்லச்சாமி அவர்கள் உறுப்பினர் சேர்க்கையை துவங்கி வைத்து உரை நிகழ்த்தினார். 

இதில் புதிய உறுப்பினராக ஏராளமானோர் இனணந்தனார். இறுதியாக பட்டுக்கோட்டை நகர செயலாளர் ஜலாலுதீன் அவர்கள் நன்றி உரை தெரிவித்தார்.

Advertisement
அதிரையில் குறைந்த மாத தவணையில் வீட்டு மனை பிரிவுகள்

Close