அதிரையில் இன்று ஹஜ்ஜு பெருநாளை முன்னிட்டு 9 சாலை விபத்துகள்!

வருடத்துக்கு இரண்டு முறை நமக்கு இறைவன் வழங்கிய பொக்கிஷம் இந்த இரண்டு பெருநாட்கள். இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவை. ஆனால் இந்த பெருநாளில் தான் ஊரையே துக்கத்தில் ஆழ்த்தும் சோகங்களும் அரங்கேறுகின்றன. தலைப்பை படித்தவர்கள் அதிர்ச்சியுடன் இதனை வாசிப்பீர்கள். சற்று நிதானத்துடன் இந்த சிறிய பதிவை வாசியுங்கள். பெருநாள் வந்து விட்டால் நமதூர் இளைஞர்கள் சூப்பர் ஹீரோக்கள் போல பைக்குகளில் பரப்பதை காணமுடிகின்றது. இந்த பெருமை பின்னால் அவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்த போகின்றது என்று தெரியவில்லை.

பெரும்பாலும் 18 வயது கூட பூர்த்தியாகாத சிறுவர்கள் இந்த விபத்துகளில் அதிக அளவில் சிக்குகின்றனர். இன்று அதிரை அரசு மருத்துவமனையில் மட்டும் 9 விபத்துகளுக்கான முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளன என்பதை கேட்கும் நம்மையும் அதிர வைக்கின்றது. தங்கள் பிள்ளைகளின் சந்தோசத்துக்காக அதிக விலையில் பைக்குகள் வாங்கி தரும் பெற்றோர்கள், அதே பைக்குகளால் கை இழந்து, உடல் ஊணமுற்றால் காண்பதற்க்கு நல்லதாக இருக்குமா? பதின்ம வயதை கொண்ட சிறுவர்களுக்கு இது புரியாது, பெற்றோர்களாகிய நாம் தான் கண்டிப்புடன் நடந்துகொள்ள வேண்டும். ஆனால் நாமே அவர்களின் எதிர்கால இழப்புக்கு காரணமாகி விட கூடாதௌ. சிந்திப்போம் செயல்படுவோம்.

Close