வரும் 16-ம் தேதி பெட்ரோல் பங்குகள் இயங்காது!

tv3petrol_price_gi_3009834fதமிழகத்தில் வரும் 16-ம் தேதி பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி அறிவித்துள்ளார்.

காவிரி பிரச்சினையில் கர்நாடகத்தில் வாழும் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். கர்நாடகத்தின் இந்த வன்முறை தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 16-ம் தேதி முழு கடையடைப்பு, சாலை, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற உள்ளது.

இந்த போராட்டத்தில் கலந்துகொள்ளும் விதமாக, தமிழகத்தில் வரும் 16-ம் தேதி பெட்ரோல் பங்குகள் இயங்காது என்று தமிழ்நாடு பெட்ரோல் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கே.பி.முரளி அறிவித்துள்ளார்.

கர்நாடக அரசைக் கண்டித்து நடைபெறும் முழு அடைப்பு போராட்டத்தில் சுமார் 4600 பெட்ரோல் பங்குகள் பங்கேற்பதாக கே.பி.முரளி கூறியுள்ளார்.

Close