அதிரையில் 8 ஆடுகள் ஒரே நேரத்தில் மரணம்!

அதிரை நெசவுத் தெருவை சேர்ந்தவர் அப்துர் ரஹ்மான். இவர் சொந்தமாக ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை இவருடைய 8 ஆடுகளும் ஒரே நேரத்தில் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் செய்வதறியாது திகைத்துள்ளார்.

இந்த ஆடுகள் குப்பைகளை மேயும் பொழுது அதில் ஏதாவது விசத்தையொ, பாலிதீன் பைகளையோ, அல்லாது விஷமாகிப் போன பழைய உணவுகளையோ உட்கொண்டிருப்பதால் தான் உயிரிழந்துள்ளன என சந்தேகிக்கப்படுகிறது. இது போன்று நாம் எளிமையாக குப்பைகளில் நச்சுத்தன்மைகள் கொண்ட பொருட்களை கொட்டி விட்டு வருகிறோம். அதனால் நமது சுகாதாரம் பாதிப்படைவதுடன், வாயில்லா உயிரினங்கள் பல பாதிக்கப்படுகின்றன.img_5440 img_5441 img_5443 img_5444 img_5445 img_5446

Close