Adirai pirai
islam posts உள்ளூர் செய்திகள்

அதிரையில் ஆதரவற்ற நிலையில் வஃபாத்தான முதியவரின் உடலை நல்லடக்கம் செய்த அதிரை தமுமுக வினர் (படங்கள் இணைப்பு)

அதிரை வண்டிப்பேட்டையில் வயதான யாசகம் கேட்கக்கூடிய முதியவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் இன்று காலை உடல்நலக் குறைவால் வஃபாத்தானார். இதையடுத்து ஆதரவற்ற நிலையில் இருந்த ஜனாசாவை அதிரை தமுமுக வினர் குளிப்பாட்டி, கஃபனிட்டு, நல்லடக்கம் செய்தனர்.

இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தமுமுக தலைவர் அஹமது ஹாஜா, நகர மமக துணை செயலாளர் சேக்காதி, மமக இளைஞர் அணி செயலாளர் கனி, தமுமுக 12வது வார்டு கிளை செயலாளர் சலீம், தமுமுக நகர மாணவரணி செயலாளர் நூர் முஹம்மது, மமக வை சேர்ந்த ஹாலித், நசுருத்தீன் உள்ளிட்ட தொண்டர்கள் பலர் உடனிருந்தனர். இதற்கான செலவுகள் அனைத்தும் தமுமுக வின் கூட்டுக்குர்பானி திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற நிதியால் வழங்கப்பட்டது என அக்கட்சியினர் நம்மிடம் தெரிவித்தனர்.img_5449img_5453.jpgimg_5451img_5452.jpgimg_5450.jpgimg_5449.jpgimg_5457.jpg

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy