ஒட்டகத்தை குர்பானி கொடுப்பதற்கு தடை கோரிய வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது!

பக்ரீத் பண்டிகையின் போது குர்பானிக்காக ஒட்டகங்களை பலியிடுவது வழக்கம். ஆனால் இவ்வாறு ஒட்டகங்களை பலியிடுவதை தடை செய்யக்கோரி உத்தரபிரதேசத்தை சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி என்ற வக்கீல் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

மதரீதியான காரணங்களுக்காக மிருகங்களை பலியிடுவதற்கு விலக்கு அளிக்கும் வகையில் விலங்குகள் வதை தடை சட்டத்தில் உள்ள 28–வது பிரிவை நீக்கவேண்டும் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மதன் பி.லோகுர், ஆர்.கே.அகர்வால் ஆகியோர் அடங்கிய அமர்வு, விசாரணை தொடங்கியதுமே வழக்கை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர். இது தொடர்பாக மனுதாரர் தரப்பு வக்கீல் டெல்லி ஐகோர்ட்டை அணுகுவதற்கு அனுமதிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் டெல்லி ஐகோர்ட்டை அணுக அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தனர்.

Close