அதிரையில் சிறப்பாக நடைபெற்ற ஈத்-மிலன் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி! (படங்கள் இணைப்பு)

அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பாக வருடந்தோறும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 2013 வருடத்திலிருந்து அல்லாஹ்வின் பேருதவியாலும் அனைத்து சமுதாய மக்களின் பேராதரவினாலும் சிறப்பாக நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே.

அதுபோல் இவ்வாண்டிற்கான பெருநாள் சந்திப்பு – கட்டுரைப்போட்டி பரிசளிப்பு மற்றும் அனைத்து சமுதாய மக்களோடு விருந்தோம்பல் நிகழ்ச்சி அதிராம்பட்டிணம் பவித்ரா திருமண மண்டபத்தில் 18.09.2016 காலை 10 மணிக்கு தொடங்கி சிறப்பாக நடைபெற்றது.

அதிரையை சார்ந்த மவ்லவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி முன்னாள் முதல்வர் பேரா. முஹம்மத் அப்துல் காதிர் வரவேற்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பிரபல எழுத்தாளர் திரு. பாரதி கிருஷ்ண குமார் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார். நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளராக கலந்து கொண்ட சென்னையை சேர்ந்த Dr. KVS ஹபீப் முஹம்மத் (M.B.B.S) அவர்கள் சிறப்பு சொற்பொழிவாற்றி அனைவரின் கேள்விகளுக்கும் சிறப்பான முறையில் பதில் அளித்தார்கள்.

இந்நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக கடந்த மாதம் அதிரை ஈத் மிலன் கமிட்டி சார்பில் நடைபெற்ற பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவிற்கான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு நிகழ்வு நடைபெற்றது.

இறுதியாக அதிரை காதிர் முஹைதீன் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் செய்து அஹ்மது கபீர் அவர்கள் நன்றியுரையுடன் அனைத்து சமுதாய மக்களுக்கான மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.img_5517img_5518img_5519

இப்படிக்கு
அதிரை ஈத் மிலன் கமிட்டி
அதிராம்பட்டிணம்.img_5524img_5523img_5522img_5521img_5520

Close