அதிரை சம்சுல் இஸ்லாம் சங்கம் நடத்தும் புது மண தம்பதிகளுக்கான கலந்தாய்வுக் கூட்டம்!

அதிரையில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நூற்றுக்கும் அதிகமான திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இனி வரும் வாரங்களிலும் தொடர் திருமணங்கள் நடைபெற உள்ளன. இவ்வாறு திருமணம் செய்யும் புதுமண தம்பதிகள் எப்படி வாழ வேண்டும்? மார்க்கப்படி நடப்பது எப்படி? ஒற்றுமையுடன் இருவரும் விட்டுகொடுத்து நடப்பது? எப்படி என்பது குறித்து மார்க்க அறிஞர்கள் மூலமாக ஒரு கலந்தாய்வு கூட்டம் வரும் 21.09.2016 புதன்கிழமை காலை 10:00 மணிக்கு சம்சுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் நடைபெற உள்ளது. இதில் புதுமண தம்பதிகள், திருமணம் செய்ய இருப்பவர்கள் அனைவரும் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

Close