பட்டுக்கோட்டையில் மத்தியில் ஆளும் மோடியின் பா.ஜ.க அரசை கண்டித்து PFI அமைப்பினர் நடத்திய தெருமுனை பிரச்சாரம் (படங்கள் இணைப்பு)

இந்தியாவை மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசால் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரமும், இஸ்லாமிய வன்முறைகளும் மறைமுகமாக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதனை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் மாநிலம் தழுவிய பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இன்று மாலை பட்டுக்கோட்டை பேருந்து நிலையம், போஸ்ட் ஆபிஸ் முக்கம், மணிக்கூண்டு ஆகிய இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் அதிரை வழக்கறிஞர் நிஜாம் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நாளைய தினம் அதிரையில் நான்கு இடங்களில் இந்த தெருமுனைப்பிரச்சாரங்கள் நடைபெற உள்ளன.

img_5559img_5553img_5554img_5555img_5556img_5559

Close