WhatsApp ஐ பின்னுக்கு தள்ளும்? Google Allo அறிமுகமானது! (Video Review)

கைபேசியில் SIM இல்லாமல் இருப்பதை கூட பார்க்கலாம் ஆனால் WhatsApp இல்லாதவர்களின் எண்ணிக்கை சொர்ப்பமே. அந்த அளவுக்கு WhatsApp நம் வாழ்க்கையில் முக்கியமான ஒன்றாகி போனது. 

உறவினர்கள், நண்பர்கள் என அனைவருடனும் உடனுக்குடன் நம் உரையாடல்களை பகிர்வதற்க்கு சிறந்த வழித்தடமாக அமைந்திருக்கின்றது.

இதனுடைய சிறப்பம்சமே கை பேசி எண்ணை வைத்து கணக்கு துவங்குவதுதான். இது மக்களுக்கு எளியதாகிவிட்டது.

Google நிறுவனம் தங்களுடைய பல அப்ளிகேஷன்களை அறிமுகம் செய்தது எதுவும் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. கூகுலின் ID கட்டாயமாக இருந்ததே இந்த தோல்விகளுக்கான காரணமாகின. 

தற்பொழுது Google Allo என்கிற மென்பொருளை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இது WhatsApp ஐ விட பல அம்சங்களை கொண்டுள்ளமையால் இதனை பயன்படுத்த மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

இந்த App ஐ பெறுவதற்கு முன்பதிவு செய்யும் முறையும் அமல் படுத்தியுள்ளது இந்நிறுவனம். அவர்கள் மென்பொருளை வெளியிடும் பொழுது பயனாளர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பபடும்.

புதன் காலை Google Allo மென்பொருள் வெளியிடபட்டது. இது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளியிட்ட 24 மணி நேரத்திலேயே 50 ஆயிரத்திற்கும் அதிகமான பயனாளர்ககளால் தரவிரக்கம் செய்யபட்டது குறிப்பிட்டதக்கது.

இதில் இருக்கும் பல புதிய அம்சங்கள் WhatsApp காட்டிலும் சிறந்ததாக இருக்கின்றது. மேலும் chat செய்யும் பொழுதே கூகுலில் ஏதேனும் தேட விரும்பினால் ‘@google Restaurant’ (உதாரதத்திற்க்கு) இப்படி கொடுத்தால் அருகிலுள்ள உணவகங்கள் விபரம் தோன்றும். 

இன்னும் பல அசத்தலான அம்சங்களை உள்ளடக்கியுள்ளது Google Allo.

Google Allo வை Play Store மற்றும் APP Store ல் பெறலாம்.

Download Here \/

Google Allo (Android)

Mohamed Salih M.R

Close