துபாயில் நடைபெற்ற பிரம்மாணடமான கிரிக்கெட் தொடர்போட்டியில் அதிரை ABCC அணி அபார வெற்றி பெற்றது!

துபாயில் திறமைவாய்ந்த பல்வேறு கிரிக்கெட் அணிகள் விளையாடும் தொடர்போட்டி துவாய் குலோபல் இன்று துவங்கியது. இதில் அதிரை பாய்ஸ் கிரிக்கெட் கிளப் அணியினர் ப்லூ புல் அணியினரை எதிர்த்து விளையாடினர். முதல் பேட்டிங் இறங்கி சிறப்பாக விளையாடிய அதிரை அணியினர் 16 ஓவர்களுக்கு 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 264 ரண்களை குவித்தனர். அந்த அணி வீரர் சமீமுத்தீன் 55 ரண்கள் குவித்து அசத்தினார். அஸ்லம், யாசின், சலீம் ஆகியோர் அதிரடி ஆட்டம் ஆடி ரண்களை குவித்தனர். இதனை எதிர்த்து விளையாடிய ப்லூ புல் அணியினர் 197 ரண்கள் மட்டுமே குவித்து தோல்வியை தழுவினர்.img_5627 img_5628 img_5629

Close