அக்டோபர் 17,19 தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல்!

உள்ளாட்சி அமைப்புகளுக்கு, 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 11 மற்றம் 19 தேதிகளில் இருகட்டமாக் தேர்தல் நடைப்பெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் அடுத்த மாதம் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

அதற்கு முன்னதாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிப்பதற்கான ஏற்பாடுகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டியது. தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் பட்டியலும் அரசிதழில் வெளியிடப்பட்டது.

இதையடுத்து உள்ளாட்சி தேர்தல் தேதி தொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியானது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் கூட்டரங்கில் இன்று மாலை 6.15 மணிக்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மாநில தேர்தல் ஆணையர் சீதாராமன், உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவித்தார்.

அக்டோபர் 17 மற்றும் 19ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித்தேர்தல் நடைபெறும். அக்டோபர் 21ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவங்கும் என்று அறிவித்தார் சீதாராமன்.

Close