சென்னை சென்றுகொண்டிருந்த பேருந்தை பயணிகள் அதிரை முத்துப்பேட்டை ஈ.சி.ஆர் சாலையில் நிறுத்தியதால் பரபரப்பு (படங்கள் இணைப்பு)

img_5673தொண்டியிலிருந்து பாண்டிச்சேரி வழியாக சென்னை செல்ல கூடிய தனியார் பேருந்து. பெண்கள்,குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான பயனிகளை ஏற்றி சென்று கொண்டிருந்தது. இச்நிலையில் பேருந்தின் நிலை மிகவும் மோசமாக இருந்ததால் முத்துப்பேட்டை ஈசிஆரில் பயணிகளால் பேருந்து நிறுத்தப்பட்டது. அங்கு அவர்கள் மாற்று பேருந்து கேட்டும் வழங்கப்படவில்லை. இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் பயணிகளிடம் கடுமையாக பேசி பேருந்தில் ஏற சொல்லியுள்ளனர். நூற்றுக்கணக்கான ரூபாய் கட்டணத்தை வாங்கும் பேருந்து நிர்வாகம் இது போன்ற பழுதடைந்த பேருந்துகளை இயக்குவதால் உயிரிழப்புகள் அதிகம் ஏற்படுகின்றன. இதனை கவனத்தில் கொள்ளாமல் அனுமதியளித்த போக்குவரத்து துரையின் செயலும் கண்டிக்கத்தக்கது.

img_5667 img_5668 img_5670 img_5672 img_5674

 

Close