பேஸ்புக்கால் இதுவரை 4 கோடி பேர் மரணம்!

facebook-death-memorialized-accounts-digital-legacyஉலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் பிரபலமானதும் அதிகளவானோர் பயன்படுத்தும் சமூக வலைத்தளமாக பேஸ்புக் இருந்து வருகிறது.

பேஷ்புக் சமூக வலைத்தளத்தை அறியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். 2004ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பேஷ்புக் சமூக வலைத்தளத்தை தற்போது உலக முழுவதும் 150 கோடிக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர்.

தினமும் 115 கோடி பேர் பேஷ்புக் வலைத்தளத்திற்குள் வந்து செல்கின்றனர்.

எவ்வாறாயினும் 2004ம் ஆண்டு முதல் இதுவரை பேஸ்புக் வலைத்தளத்தை பயன்படுத்திய சுமார் 4 கோடி பேர் மரணமடைந்துள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

ஒரு மணித்தியாலத்திற்கு பேஸ்புக் சமூக வலைத்தளத்தை பயன்படுத்தும் 428 பேரில் ஒருவர் மரணிப்பதாகவும் தினமும் 10 ஆயிரத்து 273 பேர் இறப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனடிப்படையில், ஒரு மாதத்தில் 3 லட்சத்து 12 ஆயிரத்து 500 இறப்பதாக கூறப்படுகிறது.இந்த இறப்பு வீதம் காரணமாக 2065ம் ஆண்டளவில் உலகில் பேஷ்புக் வலைத்தளத்தை பயன்படுத்துவோரை விட இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2065ம் ஆண்டில் உலகில் மிகப் பெரிய மரண நினைவுச் சின்ன இணைப்புகள் பேஸ்புக் குவியும் என கூறப்படுகிறது.

தரவுகளை அழிக்காது அப்படியே வைத்திருப்பது என பேஸ்புக் நிறுவனம் எடுத்துள்ள தீர்மானமே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

சில மரணங்களுடன் பேஸ்புக் சமூக வலைத்தளம் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது.

பேஸ்புக் ஊடாக ஏற்படும் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு போவது மற்றும் பேஸ்புக் ஊடாக நடக்கும் குற்றச் செயல்கள் இந்த மரணங்களுக்கு காரணமாக இருப்பதாக ஆய்வு நடத்திய குழு ஒன்று கண்டறிந்துள்ளது

Close