Adirai pirai
உள்ளூர் செய்திகள்

எலெக்‌ஷன் கலெக்‌ஷன்-அதிரை மக்களை முட்டாளாக்கும் அரசியல் வியாதிகள்

img_5703தமிழகத்தில் சென்னை, திண்டிக்கல் தவிர்த்து பிற பகுதிகளில் வரும் அக்டோபர் 17 அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் அதிரையை பொருத்தவரை கடந்த ஒரு மாத காலமாக பெரும்பாலான மேம்பாட்டு திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

  • பல நாட்களாக குண்டும் குழியுமாக காணப்படும் பாதைகளில் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • 4 ஆண்டுகளாக மக்களின் கோரிக்கைகள் காதில் வாங்கிக்கொள்ளாமல் தற்பொழுது கழிவு நீர் கால்வாய் திட்டம் ஒரு வார்டில் நடைபெற்று வருகிறது.
  • சிஎம்பி வாய்காலில் கலக்கும் கழிவு நீரை கட்டுப்படுத்த செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாதாள சாக்கடை திட்டம்.
  • 5 வருங்களாக சரி செய்யப்பாடாத சில மின்கம்பங்கள் தற்பொழுது சீரமைக்கப்பட்டு வருகிறது.
  • பழைய போஸ்ட் ஆபிஸ் ரொட்டில் ஓடிக்கொண்டிருந்த சாக்கடை நீருக்கு தற்பொழுது சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக மக்களின் கோரிக்கைகளையும் இன்னல்களையும், போராட்டங்களையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் தேர்தலை மையமாக வைத்து செய்யப்படும் இது போன்ற செயல்களுக்கு பெயர் சேவை அல்ல, மக்கள் ஏமாற்றுபவர்களை நன்றாக விளங்கிகொண்டார்கள். இவர்கள் மீண்டும் வெற்றிபெற்றால், இதே போன்று அடுத்த 5 இறுதியில் தேர்தலில் போதுதான் கோரிக்கைகளை நிறைவேற்றுவார்கள். உள்ளாட்சி தேர்தலை பொருத்தவரை கட்சிகளை பார்த்து வாக்களிப்பதை விட நல்லவர்களுக்கு வாக்களிப்பதே நமது வார்டுகளுக்கு நண்மையளிக்கும். அவர் சுயேட்சையாக இருந்தாலும் சரியே!!!

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy