“பிரியும் தொலைவில் ரமழான்”..!! 

பிரியா மனமுடன் என்னை விட்டு
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

பிறை பார்க்கும் ஏக்கத்தை எக்காலமும் எனக்களித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

ஒன்றுக்கு ஏழுநூறு நன்மைகள் எனக்களித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

பசித்தவனின் பசியை பக்குவமாய் உணர வைத்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

பயிற்சி பட்டறையில் பொறுமையை கற்பித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

இரவும் பகலும் இறைவணக்கத்தை அதிகப்படுத்தி
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

அளவில்லா சந்தோஷத்தை நோன்பு திறக்கும்போது எனக்களித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

புனித இரவின் தேடலை புத்துணரவோடு எனக்களித்து
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

இருபத்தி ஒன்பதோ, முப்பதோ என குறையும், நிறையுமாய்
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

உயிர் இருக்குமா அடுத்த ரமழானில் உத்திரவாதம் இல்லாமல்
பிரிந்து செல்லும் ரமழானை பிரிந்து நான் என் செய்வேன்..

 -அஹமது ரிலா

Advertisement

Close