உள்ளாட்சி தேர்தலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று மட்டும் 140 வேட்பு மனுக்கள் தாக்கல்!

தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடுத்த மாதம் (அக்டோபர்) 17, 19–ந் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டமாக நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுதாக்கல் நேற்று தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வருகிற 3–ந்தேதி ஆகும்.

இதில், பஞ்சாயத்து தலைவர்கள் பதவிக்கும், பஞ்சாயத்து வார்டு உறுப்பினர்கள் பதவிக்கும் தனியாகவும், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தனியாகவும், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு தனியாகவும் வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

145 பேர் மனுத்தாக்கல்

இந்த நிலையில் நேற்று முதல் நாளில் பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்கு 6 பேரும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 139 பேரும் என மொத்தம் 145 பேர் மனு தாக்கல் செய்தனர்.

பஞ்சாயத்து தலைவர் பதவிகளுக்காக மனுத்தாக்கல் செய்தவர்கள் ஒன்றிய அலுவலகங்களிலும், கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் செய்தவர்கள் அந்தந்த பஞ்சாயத்து அலுவலகங்களிலும் மனுத்தாக்கல் செய்தனர்.

தஞ்சை மாநகராட்சி, கும்பகோணம், பட்டுக்கோட்டை நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் ஆகியவற்றில் நேற்று யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Close