Adirai pirai
posts

சவூதியில் அன்லிமிட்டேட் இண்டெர்நெட் வசதியை ரத்து செய்ய தொலைதொடர்பு துறை முடிவு!

img_5761சவூதி தொலைதொடர்பு துறை அங்கு செயல்பாட்டில் இருந்து வரும் அன்லிமிட்டேட் இண்டெர்நெட் சேவையை ரத்து செய்ய தொலைதொடர்பு துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து தொலைதொடர்பு நிறுவனங்களில் கருத்துகளுக்காக அந்நாட்டு அரசு காத்துள்ளது.

ஒருமனதாக இந்த முடிவு எடுக்கப்பட்டதால் ப்ரீ-பெய்டு வாடிக்கையாளர்கள் அன்லிமிட்டேட் இணையதள சேவையை பயன்படுத்த முடியாது. போஸ்ட் பெய்டு, ப்ராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. சில தொலை தொடர்பு நிறுவனங்கள் இந்த சேவையை நிறுத்தியுள்ளதாக் கூறப்பட்டாலும் மொபிலி, ஜைன் ஆகிய நிறுவனங்கள் இன்னும் இந்த சேவை தொடர்ந்து வழங்கி வருகிறது.