குவைத்தில் 12 ஆண்டுகளாக பணிபுரிந்த தமிழருக்கு குடும்பத்தோடு இன்ப அதிர்ச்சி அளித்த முதலாளி!

img_5772குவைத்தில் தமிழகத்தை சேர்ந்த ஓட்டுநர் முருகானந்தம் அருண் பணியில் சேர்ந்து 12 ஆண்டுகள் நிறைவையோட்டி அவருகே தெரியாமல் குவைத் நாட்டை சேர்ந்த உரிமையாளர் த‌னது குடும்பத்தினரோடு ஓட்டுநருக்கு தனது வீட்டில் பணிக்கு சேர்ந்த நாளை நினைவில் வைத்து ஏற்பாடுகளை செய்து பரிசுகளை வழங்கி குடும்பதோடு வாழ்த்தி தனது ஓட்டுநரை நெகிழ செய்துள்ளார்.

தமிழகத்தை சேர்ந்த துகிலி முருகானந்தம் அருண் குவைத் நாட்டில் உள்ள அரபி வீட்டில் ஓட்டுநராக கடந்த 2004ம் ஆண்டியிலிருந்து பணியாற்றி வருகிறார்.

இவரை 24.9.2016 அன்று இரவு அவர் முதலாளி தொலைபேசியில் தொடர்புகொண்டு வீட்டுக்குள்ளே வருமாறு அழைத்தார். முருகானந்தம் அருண் உள்ளே சென்றவுடன் அரபி குடும்பத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு அன்போடு அழைத்து நீ வந்து இன்றோடு சரியாக 12 ஆண்டுகள் ஆகிவிட்டது.

இதுவரையில் எங்கள் வீட்டில் ஒரு பிள்ளையாக மிகவும் பொறுப்புனர்வோடு பண்யாற்றி வ‌ந்தாய் ஆகவே உன்னுடைய இந்த 12 ஆம் ஆண்டு வருகை நாளை நாம் குடும்பத்தோடு கேக் வெட்டி கொண்டாடுவோம். என கூறி அனைவரும் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினர்.

அதோடு அவரை கௌரவ படுத்தி அன்பளிப்பு தொகை உள்பட ஒரு கைபேசியையும் பரிசாக கொடுத்தனர்.தனது உரிமையாளர் மற்றும் குடும்பத்தினரின் அன்பில் முருகானந்த நெகிழ்ந்து மகிழ்ந்தார்.

இதுவரை முருகானந்தம் அருண் செய்த பணிக்கு கொடுத்த ஊதியதொகையின் மதிப்பைவிட அவர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு நம்பிக்கையையும் பெரிய விலைமதிக்க முடியாததாக கருதுவதாக அவரது சகோதரர் துகிலி அம்பேத்பிரேம் தெரிவித்தார். – தினகரன்

Close