பட்டுக்கோட்டையில் சூதாட்ட கும்பல் கைது!

பட்டுக்கோட்டை மணிகூண்டு பகுதியில் உள்ள லெட்சுமி லாட்ஜில் கடந்த சில மாதங்களாக சூதாட்டம் நடைபெற்று வந்துள்ளது. 
அந்த தகவல் அறிந்து மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பெயரில் பட்டுக்கோட்டை டி.எஸ்.பி மேற்பார்வையில் எஸ்.ஐ தீபநாதன் தலைமையில் போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில் சூதாட்ட கும்பல் சிக்கியது.
பட்டுக்கோட்டையை சேர்ந்த வைத்தியநாதன் (65), ஜமால்(52), பைசல் (38), நிஜாமுதீன் (65), கிக்காராம் (42), மஸ்ஜித் (38), பஞ்சநாதன் (54), பொதியப்பன் (58) உள்ளிட்ட எட்டுபேர் கும்பல் சிக்கியது. 
போலீஸார் சோதனையின் போது 12050 ரூபாய் சூதாட்ட பணம் பறிமுதல் செய்யப்பட்டு அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
courtesy: pattukkottai newstimes

Advertisement

Close