கோடிக்கணக்கான முஸ்லிம்கள் அமைதியை விரும்புகின்றனர்..! இஸ்லாமிய தீவிரவாதம் என்று கூறக்கூடாது! ஒபாமா அதிரடி! (வீடியோ)

அமெரிக்க அதிபர் ஒபாமா 28.09.16 அன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அதில் CNN செய்தியாளர் நீங்கள் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற வார்த்தைகளை சொல்ல மறுக்கிறீர்களே, அது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த ஒபாமா…

அமெரிக்கா உட்பட உலகம் முழுவதும் முஸ்லிம்கள் பில்லியன் கணக்கில் வாழ்கின்றனர். உலகம் முழுவதும் வாழும் பில்லியன் கணக்கான முஸ்லிம்கள் அமைதியையே விரும்புகின்றனர்.

அமெரிக்காவை உருவாக்கியதில் முஸ்லிம்களின் பங்கு உள்ளது. அரசின் முக்கியத்துறையான ராணுவத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை உள்ளிட்டவற்றில் இணைத்து பெரும் பங்காற்றி வருகின்றனர்.

நம்முடைய அண்டை வீட்டுக்காரர்களாக வாழும் முஸ்லிம்களை தீவிரவாதிகளோடு எப்படி தொடர்புப்படுத்த முடியும் ?

கிறித்தவர்கள் குழுக்கள் தீவிரவாத செயலில் ஈடுபட்டால் அவர்களை கிறித்தவ தீவிரவாதம் என்போமா ?

தீவிரவாதிகளை மதத்துடன் தொடர்புப்படுத்தக்கூடாது.

உலகம் முழுவதும் வாழும் கோடிக்கணக்கான முஸ்லிம்கள் அமைதியை விரும்பக்கூடியவர்கள். அவர்களை ஒருபோதும் தீவிரவாதத்துடன் தொடர்புப்படுத்தக்கூடாது என்றார் ஒபாமா.

Close