தஞ்சை மாவட்டத்தில் 6 நாட்களில் 10,003 பேர் வேட்பு மனு தாக்கல்!

tamil_dailynews_631939172745தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள 5591 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 6 நாட்களில் 10 ஆயிரத்து 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று 6வது நாளாக 677 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். தஞ்சை மாவட்டத்தில் உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 26ம் தேதி தொடங்கியது. முதல் நாளில் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 6 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 139 பேரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 2ம் நாளில் தஞ்சை மாநகராட்சியில் அதிமுகவினர் 45 பேர் என்று 49 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்தனர்.  மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 43 பேரும், ஊராட்சித் தலைவர் பதவிகளுக்கு 9 பேர், வார்டு உறுப்பினருக்கு 173 பேர், நகர்மன்ற உறுப்பினருக்கு  ஒருவர், பேரூராட்சி உறுப்பினருக்கு ஒருவர் என்று மொத்தம் 276 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.

3ம் நாளாக மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு 2 பேர், ஒன்றியக்குழு உறுப்பினருக்கு 5 பேர், ஊராட்சி தலைவருக்கு 148 பேர், வார்டு உறுப்பினருக்கு 1178 பேர், மாநகராட்சி உறுப்பினருக்கு 8 பேர், நகராட்சி உறுப்பினருக்கு 4 பேர், பேரூராட்சி உறுப்பினருக்கு 8 பேர் என்று 1,353 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். 4வது நாளாக மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு 4 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினருக்கு 15 பேர், ஊராட்சி தலைவருக்கு 199 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 1045 பேர், மாநகராட்சி உறுப்பினருக்கு 8 பேர், நகராட்சி உறுப்பினருக்கு 8 பேர், பேரூராட்சி உறுப்பினருக்கு 34 பேர் என மொத்தம் 1313 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். 5வது நாளாக மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு 18 பேர், ஒன்றியக்குழு உறுப்பினருக்கு 236 பேர், ஊராட்சி தலைவருக்கு 1465 பேர், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 4084 பேர், மாநகராட்சி உறுப்பினருக்கு 71 பேர், நகராட்சி உறுப்பினருக்கு 51 பேர், பேரூராட்சி உறுப்பினருக்கு 314 பேர் என்று மொத்தம் 6239 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நேற்று 6வது நாளாக மாவட்ட ஊராட்சி உறுப்பினருக்கு 3 பேரும், ஒன்றியக்குழு உறுப்பினருக்கு 28 பேர், ஊராட்சி தலைவருக்கு 93 பேர், வார்டு உறுப்பினருக்கு 504 பேர், மாநகராட்சி உறுப்பினருக்கு 6 பேர், நகராட்சி உறுப்பினருக்கு 13 பேர், பேரூராட்சி உறுப்பினருக்கு 30 பேர் என மொத்தம் 677 பேர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தஞ்சை மாவட்டத்தில் காலியாக உள்ள 5591 உள்ளாட்சி பதவிகளுக்கு கடந்த 6 நாட்களில் 10 ஆயிரத்து 3 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Close