கோவை சசிகுமாரின் கொலைக்கும் முஸ்லிம்களுக்கும் தொடர்பில்லை! இந்து முன்னனி உட்கட்சி பூசலால் கொலை செய்யப்பட்டது அம்பலம்!

img_5988கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் உட்கட்சி மோதலில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது.
கோவை மாவட்டம் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளராக இருந்த சசிகுமார் கடந்த மாதம் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். இக்கொலையைக் கண்டித்து இந்து முன்னணியினர் வெறியாட்டம் போட்டனர்.
கோவையில் பூட்டப்பட்ட கடைகளை உடைத்து இந்து முன்னணியினர் கொள்ளையடித்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. துடியலூர் மகாலட்சுமி பேக்கரிக்குள் நுழைந்தும் அக்கும்பல் சூறையாடினர்.

மதமோதல்?
அப்போதே இந்து முன்னணியினரிடையேயான உட்கட்சி மோதலால்தான் இக்கொலை நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் பாஜகவினர் உள்ளிட்டோர் மத அமைப்புகளுக்கு தொடர்பிருப்பதாக குற்றம்சாட்டினர். சென்னையில் தடையை மீறி தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் போராட்டமும் நடைபெற்றது.

சர்வதேச சதி
மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனோ, தமிழகத்தில் இந்து இயக்க தலைவர்கள் கொலையில் சர்வதேச சதி இருக்கிறது என கூறியிருந்தார். இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீக்குளிப்பு
தீக்குளிப்பு
இந்த நிலையில் கோவையை சேர்ந்த இந்து முன்னணி நிர்வாகி ஆனந்த் என்பவர் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர்.

உட்கட்சி மோதல்
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, சசிகுமார் கொலை வழக்கில் தாம் கைது செய்யப்படலாம் என்பதற்கு பயந்து தீக்குளித்ததாக கூறியுள்ளார். இதனால் சசிகுமார் உட்கட்சி மோதலில்தான் கொல்லப்பட்டிருக்கலாம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Close