அதிரைக்கு இந்த மூன்றும் வருமா?

   நமதூரை பொருத்தவரை பல்வெறு துறைகளிலும் நல்ல நிலையில் தான் உள்ளது. தேவையான பொருட்கள் வாங்க பட்டுக்கோட்டைக்கு செல்ல வேண்டும் என்ற நிலை மாறி அனைத்து பொருட்களையும் வீட்டில் அமர்ந்தபடியே டோர் டெலிவரியில் பெரும் வசதியும் வந்து விட்டது.

மஞ்சப்பையை தூக்கிக்கொண்டு கடைத்தெருவுக்கு சென்று பொருட்கள் வாங்கிய காலம் போய் வைஃபையை ஆன் செய்து ஆன்லைனில் பொருட்கள் வாங்கி வருகின்றனர் நமதூர் மக்கள்.
இருப்பினும் நமதூரில் ஒரு சில அத்தியாவசிய தேவைகள், வசதிகள் இன்னும் நமதூருக்கு வராதது கவலையளிக்கிறது.
ஊரில் எந்த அளவுக்கு சாலை போக்குவரத்து வளர்ச்சியடைந்திருக்கிறதோ அதே அளவிற்க்கு சாலை விபத்துகளும் அதிகரித்துள்ளது.
ஊரில் யாரை பார்த்தாலும் பைக்குகளில் செல்வதை காணமுடிகிறது. 7வது படிக்கும் சிறுவன் முதல் 70 வயதை தாண்டிய முதியவர் வரை பட்டனை அமுக்கி பைக்கில் பறக்கின்றனர்.
இது ஒரு ஆராக்கியமான சூழல் தான் என்றாலும் நல்லது நடக்கும் போது கூடவே ஒரு கெட்டவன் வருவான் என்பது போல சாலை விபத்து என்ற ஒருவன் பின் தொடர்ந்து கொண்டே வருகின்றான்.
தற்போது ஊரில் வாரம் ஒரு முறை சாலை விபத்தை காணமுடிகிறது. அனைத்து விபத்துக்களுக்கு அதிகம் விரைந்து செல்வதற்கு த.மு.மு.க ஆம்புலன்ஸ் இருந்தாலும் ஊருக்கென ஒரு 108 ஆம்புலன்ஸும் தேவை படுகிறது.
அடுத்ததாக அதிரையை அச்சுறுத்தி வருவது தீவு விபத்து. இந்த காலகட்டத்தில் எங்கும் தீ விபத்து எதிலும் தீ விபத்து என்றாகிவிட்டது. அதிரையில் கடந்த காலங்களில் நடைப்பெற்ற தீ விபத்துக்கள் அனைத்திலுமே தீயணைப்பு வாகனம் தாமதமாக வந்த செய்தியை கேட்க முடிந்தது.
தீ விபத்து நடந்தது குறித்து தீயணைப்பு அலுவகத்துக்கு தொடர்புகொண்டு சொல்லி அவர்கள் அங்கிருந்து வருவதற்க்குள் தீ தனது வேலையை காட்டிவிடுகிறது.
இது போன்ற சிக்கல்கள் வராமல் இருக்க என்னேரமும் தயார் நிலையில் இருக்க அதிரைக்கென்று ஒரு தீயனைப்பு வாகனமும் தேவை படுகிறது.
அடுத்ததாக ஊரில்தான் எத்தனையோ மருத்துவர்கள், மருத்துவமனைகள் இருந்தாலும் 24 மணிநெர மருத்துவமனை இல்லாமல் இருப்பதும் மிகுந்த கவலை தருகிறது. 
அதிரை அரசு மருத்துவமனையை எடுத்துக்கொண்டால் பகல் 2:00 மணியளவில் கூட மருத்துவர் இல்லை என்கின்றனர் பொதுமக்கள். 
24 மணிநேர மருத்துவமனையின்றி அதிரையில் தவிப்போர் ஏராளம்.
அவசரத்திற்க்கு ஒரு முதலுதவிக்கு கூட அதிரையில் இரவு நேர மருத்துவமனையில்லாதது வருத்தமளிக்கிறது.
இவை மூன்றும் அதிரைக்கு கிடைத்தால் ஊரில் நடக்கும் அசம்பாவிதங்களை உரிய நேரத்தில் உடனுக்குடன் தவிர்த்து உதவலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்த மூன்றும் கிடைப்பதற்கு நமதூரை சேர்ந்த சில சமூக ஆர்வலர்கள் முயற்சிகள் செய்து வருகின்றனர். இதற்கு இப்பதிவை படிக்கும் உங்களுடைய முயற்சியும் தேவை .

அது என்ன முயற்சி ?

நமதூரில் உள்ள இந்த மூன்று கோரிக்கைகளையும் வலியுறுத்தி   நாம் அனைவரும்  முதலமைச்சர் அவர்களின் தனி பிரிவுக்கு இந்த மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மின்னஞ்சல் அனுப்ப வேண்டும் . “முயற்சி திருவினையாக்கும்” என்ற பழமொழி கேற்ப கண்டிப்பாக நாம் அனைவரும் முயற்சி செய்தால் இந்த மூன்று கோரிக்கைகளும் நமதூர்க்கு கிடைக்கும் .
    
மின்னஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி :
cmsec@tn.gov.in,
cmcell@tn.gov.in .

-அதிரை பிறை குழு .

Advertisement
Close