தீபாவளி விடுமுறைக்கு சென்னையிலிருந்து சொந்த ஊர் செல்பவர்களுக்கு முக்கியமான தகவல்!

தீபாவளி திருநாளையொட்டி அக்டோபர் 26 முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதால் வெளியூர் செல்லும் பேருந்துகளில் பயணிகள் ஏறும் இடங்கள் மாற்றம் செய்து போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

  • செங்குன்றம் வழியாக ஆந்திரா மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் அண்ணா நகர் மேற்கில் உள்ள பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகள் மற்றும் காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் 100 அடி சாலையில் மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
  • திண்டிவனம், வி்க்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் அனைத்து பேருந்துகளும் தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
  • வேலூர், தரும்புரி போன்ற ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படுகிறது.
  • இதர ஊர்களுக்கு செல்லும் பேருந்துகள் வழக்கம் போல் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Close