காஷ்மிரில் விபத்தில் சிக்கிய ராணுவ வீரர்களை காத்த இஸ்லாமிய இளைஞர்கள்

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி அவர்களுக்கு எதிராக அம்மாநில இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஸ்ரீநகர் பைபாஸ் சாலையில் லஸ்ஜான் என்கிற இடத்தில் வந்துகொண்டிருந்த ஒரு ராணுவ வாகனம் மரத்தில் மோதி விபத்திற்குள்ளானது. 

நொறுங்கிய வாகனத்தில் சிக்கி ராணுவ வீரர் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடன் வந்த ராணுவ வீரர்கள் அவரை மீட்க முடியாமல் தவித்த நிலையில் அப்பகுதி இளைஞர்கள் நொறுங்கிய வாகனத்தின் அருகில் மற்றொரு வாகனத்தை அந்த ராணுவ வீரரை மீட்டனர்.

பகையை புறந்தள்ளி மனித நேயம் தலைநிமிர்ந்த நின்ற இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.

Close