வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும் அதிரை இறால் கருவாடு!

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தற்போது இறால் கருவாடுகள் ஏற்றுமதி தீவிரம் அடைந்துள்ளது.

அதிராம்பட்டினம் கடற்பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளது. இதனால் கருவாடுகள் உலர்த்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் கோழித்தீவனங்களுக்குப் பயன்படும் சங்காயம்.மற்றும் மீன் கருவாடுகள் மட்டுமல்லாமல் இறால் கருவாடுகளும் உலர்த்தப்பட்டு வருகிறது.
தஞ்சை மாவட்ட கடற்பகுதியில் பொதுவா வெள்ளை இறால் மற்றும் கருப்பு இறால்கள் அதிகம் கிடைக்கின்றன. இதில் பெரிய வகை இறால்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில் தற்போது வெளிநாடுகளில் வாழும் மக்கள் இறால் கருவாடுகளை அதிகம் விரும்பிச்சாப்பிடுவதால் இறால் கருவாடுகளுக்கு வெளிநாடுகளில் தேவை அதிகரித்துள்ளது.
இதையேட்டி இறால் கருவாடுகளின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது தற்போது இறால் வரத்து அதிகரித்துள்ள நிலையிலும் வெயில் தொடர்ந்து அடித்து வருவதாலும் இறால் கருவாடுகளை ஏற்றுமதி செய்யும் பணி தீவிரம் அடைந்துள்ளது.
இதுபற்றி மீனவர் மாரிமுத்தான் கூறுகையில் இறால் கருவாடுகள் நீண்ட வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் பரவி வந்த பிளேக் நோயைத் தொடர்ந்து வெளிநாடுகள் இதற்கு தடைவிதித்தது. இதனால் இறால் கருவாடுகள் ஏற்றுமதி நிறுத்தப்பட்டது. 
இதனால் இறால் கருவாடுகள் உற்பத்தியும் குறைந்து உள்ளுர்களில் மட்டுமே விற்கப்பட்டுவந்தது.
வெளிநாடுகளில் தடைநீக்கப்பட்டும் தொடர்ந்து இறால் கருவாடுகள் ஏற்றுமதி மந்தமாகவே இருந்துவந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் இறால் கருவாடுகள் ஏற்றுமதி தீவிரம் அடைந்துள்ளது.
சிங்கப்பூர்,மலேசியா,சவுதி,துபாய்,உள்ளிட் அரபு நாடுகளில் இறால் கருவாடுகளின் தேவை அதிகம் உள்ளதால் இந்த நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்றார்.

Advertisement
Close