அதிரை அப்துல்லாஹ் ஆலிம் அவர்களின் மறைவை துக்க தினமாக அனுசரித்து விடுமுறை அறிவித்த இலங்கை காத்தான்குடி மக்கள்!

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அறபுக்கல்லூரியின் அதிபர் சங்கைக்குரிய அப்துல்லாஹ் றஹ்மானி ஹஸரத் அவர்களின் மறைவையடுத்து அன்னாரது ஜனாஸா தொழுகை மற்றும் நல்லடக்கத்தில் கலந்து கொள்ளும் வகையில் காத்தான்குடியில் இன்று(வியாழக்கிழமை) வர்த்தக நிலையங்களை மூடுமாறு காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி வர்த்தகர் சங்கம் என்பன கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன

சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் பொதுச் சந்தை தவிர்ந்த ஏனைய வர்த்த நிலையங்கள் அனைத்தையும் மூடுமாறு வேண்டு கோள்விடப்பட்டுள்ளது.

அன்னாரது ஜனாஸா தொழுகையில் மற்றும் நல்லடக்கத்தில் கலந்து கொள்ளுமாறும் அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிராத்திக்குமாறு வேண்டுகோள்விடப்பட்டுள்ளன.

இதே நேரம் காத்தான்குடியில் வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் முச்சக்கர வண்டிகள் என்பவற்றில் அன்னாரை மறைவையொட்டி வெள்ளைக் கொடிகள் பறக்க விடப்பட்டுள்ளன.

Close