அதிரைப்பட்டினத்தின் ஆன்மீகவொளி – கவியன்பன் கலாம்

img_6167அதிரைப்பட்டினத்தின்
ஆன்மீகவொளி
காத்தான்குடி என்னும்
கிழக்கிலங்கையில்
மறைந்து விட்டு
மனங்களில் நிரந்தரமானது!

நான் பிறந்த அதே தெருவில்
நான் கண்ட மதிமுகம் ஞானத்
தேன் உண்ணும் நாங்கள் தேனீ
தீன் என்னும் மார்க்க ஞானி
தாங்களிடம் கற்றவைகள்
தாங்கி வரும் எங்களை!

இன்னல்கள் அகல
எழுதித் தந்தீர் துஆ
இன்னும் ஐவேளை ஓதும்
என் நாவின் பேரவா!

இறைவன் கட்டளை
ஏற்கின்றோம் இறப்பை
மறைந்தாலும் மறவாது
மாமேதை சிறப்பே!

தங்களின் உறவினனும் மாணவனுமாகிய

கவியன்பன் கலாம் அதிரை

Close